பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கலாபவன் மணி மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க உத்தரவு!

பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 6:49 am

பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான கலாபவன் மணி, சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.  அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் அதே நாளில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திசுக்கள் ஹைதராபாதில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, மணியின் உடலில் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்தான குளோரோபைரிஃபோஸ் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மணியின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி (மார்ச் 6) சாலக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் வந்து நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அவரது தம்பி ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் சாலக்குடியில் மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஓராண்டாகக் காத்திருந்தோம். உரிய நீதி கிடைக்காவிட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்கு முன் போராட்டம் நடத்துவோம்' என்றார். இதுபற்றி கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கலாபவன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து இதுகுறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.