திலீப் - காவ்யா திருமணம்: எல்லாப் பாராட்டுகளும் மகள் மீனாட்சிக்கே!
மகளின் சம்மதத்துடன் மகளின் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார் திலீப்.


மலையாள நடிகர் திலீப்பும் (48) நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின், மேனகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.
திலீப் - காவ்யா ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்பு 1998ல் நடிகை மஞ்சு வாரியரைத் திருமணம் செய்த திலீப், 2015-ல் அவரை விவாகரத்து செய்தார். அதேபோல தொழிலதிபர் நிஸ்சால் சந்திராவை 2009ல் திருமணம் செய்த காவ்யா, அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார்.
திலீப்பும் காவ்யாவும் 21 படங்களில் ஒன்றாக நடித்தவர்கள். இவர்களுடைய திருமணம் குறித்து நீண்டநாளாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவருமே மறுத்துவந்தார்கள். இந்நிலையில் இன்று இருவரும் திடீர் என திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை மேனகா கூறும்போது, இங்கு வரும்வரை இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
காவ்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டபோது, என்னுடைய திருமணம் என் மகளின் சம்மதத்தைப் பொறுத்தது என திலீப் கூறியிருந்தார். திலீப்பின் மகள் மீனாட்சியின் சம்மதம் இல்லாததால் தான் திருமணம் தள்ளிப்போகிறது, இதனால் திலீப்பின் குடும்பத்தின் பிரச்னைகள் நிலவுகின்றன என்றும் செய்திகள் உலவின. இந்நிலையில் மகளின் சம்மதத்துடன் மகளின் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார் திலீப்.
திலீப் - காவ்யா திருமணம் குறித்து மீனாட்சி செய்தியாளர்களிடம் பேசியபோது, என் அப்பாவைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினேன். அவர் இந்த முடிவை எடுக்க நானும் காரணம். அவருடைய முக்கியமான நாளைக் காண்பதில் எனக்கும் மகிழ்ச்சி என்றார்.
இந்தத் திருமணத்துக்கு என் மகளின் சம்மதம் உண்டு. இரு குடும்பத்தின் சம்மதத்துடனே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. பலமுறை என்னுடன் காவ்யா கிசுகிசுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வது சரியாக இருக்காது என்று திலீப் பேட்டியளித்தார். இந்தத் திருமணத்துக்கு வந்திருந்த பலரும் மீனாட்சிக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...