திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் ஏற்கெனவே லண்டனில் ஒன்றாக இருந்த புகைப்படம் வைரலானது.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 3:37 am

நாக சைதன்யா, சோபிதா காதல் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

Story image

இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலரும் முயன்றனர். இருப்பினும், அவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இதனைத்தொடர்ந்து, இந்த பிரபலங்கள் இருவரும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இறங்கினர்.

இதற்கிடையே, நடிகர் நாக சைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசு பொருளாகின.

Story image

இந்த நிலையில், நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுக்குள் சுற்றுலா செல்வது போன்ற புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அதேபோல், சோபிதாவும் காட்டுக்குள் ஜீப்பில் செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த இரு புகைப்படங்களில் இருக்கும் இடங்களும் ஒரே மாதிரி இருப்பதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளதாகவும் இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.