ரஜினியிடம் வாழ்த்துப் பெற்ற மாதவன்!
நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தை மாதவன் இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 1 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
தற்போது, நடிகர் ரஜினி காந்த் இப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகருமான மாதவனையும் விஞ்ஞானி நமிபி நாராயணனையும் சந்தித்து பேசினார்.
நடிகர் மாதவன் ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு மாதவன் கூறியதாவது:
சினிமாவின் தனியொருவர் மற்றும் லெஜண்ட் நம்பியின் முன்னிலையில் நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவது நித்தியமாக பொறிக்கப்பட்ட தருணம். ராக்கெட்ரி மற்றும் எங்கள் மீதான அன்பான பாராட்டுகளுக்கு நன்றி ரஜினிகாந்த் ஸார். இந்த உந்துதல் எங்களை முழுமையாக புத்துணர்ச்சியடையச் செய்துள்ளது. நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...