/

மீண்டும் இணையும் கமல் - மெளலி!

சிலவாரங்களுக்கு முன்பு கமலைச் சந்தித்துப் பேசினார் மெளலி. அவர் சொன்ன கதை கமலுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 11:01 am

கமலும் இயக்குநர் மற்றும் நடிகருமான மெளலியும் மீண்டும் இணைகிறார்கள். மெளலியின் கதை, திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவைப் படத்தில் கமல் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்க உள்ளார்.

சிலவாரங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கிய தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதனையடுத்து இதே படக்குழு மீண்டும் இணைய உள்ளது.

‘சமீபத்தில், கமலைச் சந்தித்துப் பேசினார் மெளலி. அவர் சொன்ன கதை கமலுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்தக் கதையை ராஜேஷ் இயக்கினால் சரியாக இருக்கும் என்று கமல் எண்ணினார். இது ஒரு நகைச்சுவைப் படம்’ என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். உத்தம வில்லன் படத்தினால் லிங்குசாமிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைச் சரிகட்ட இந்தப் படத்தை லிங்குசாமியே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல் - மெளலி கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு பம்மல் கே சம்பந்தம் வெளிவந்தது. மெளலி இயக்கிய நளதமயந்தியை கமல் தயாரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.