காதல் தோல்விக்குப் பிறகு நடித்ததே சிறந்த நடிப்பு: மகளிர் கல்லூரியில் விஷால் பேச்சு! (வீடியோ)
சினிமாவுக்காக என் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தேன். என்னால் எங்கும் வெளியே சென்று...


சென்னை எம்.ஓ.பி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விஷால் மற்றும் இயக்குநர் சுசீந்திரன் கலந்து கொண்டார்கள். மாணவிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள். அப்போது விஷால் பேசியதாவது:
அவன் இவன் படத்தில் பெண் வேடத்தில் நடித்தபோதுதான் பெண்கள்மீது மரியாதை ஏற்பட்டது. ஹீரோயின் புடைவையைக் கட்ட தாமதம் ஆனாலும் நான் திட்டமாட்டேன். ஏனென்றால் புடைவை கட்ட எவ்வளவு நேரமாகும் என்று எனக்குத் தெரியும்.
என் படங்களில் சிறந்த நடிப்பு எது என்று கேட்கிறீர்கள். என் காதல் தோல்விக்குப் பிறகு நான் நடித்த படம்தான் என்னுடைய சிறந்த நடிப்பு. இதை இதுவரை வெளியே சொன்னதில்லை. அப்போது நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். ஷூட்டிங் போகவும் பிடிக்கவில்லை. ஆனால் என் வலி அனைத்தையும் மறந்துவிட்டு மேக்கப் போட்டு நடித்தேன். அதுதான் என் சிறந்த நடிப்பாக இருந்தது. அது எந்தப் படம் என்று சொல்லமாட்டேன்.
சினிமாவுக்காக என் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தேன். என்னால் எங்கும் வெளியே சென்று நினைத்ததைச் செய்யமுடியாது. அதனால்தான் நான் இமயமலைக்குச் செல்கிறேன். இங்கு செய்யமுடியாததை அங்கு செய்கிறேன்.
விஷால் - சுசீந்திரன் பேச்சு (வீடியோ)
</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...