தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கபாலி படம் பாட்ஷாவை மிஞ்சுமா? ரஜினி பதில்

இப்போது நான் நடிக்கும் கபாலி படம் பாட்ஷாவை மிஞ்சுமா என்று கேட்கிறார்கள். சத்தியமா...

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:40 am

எழில்

தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களை சிறிய வயதில் முதல்நாளே பார்த்து ரசித்தவன் நான். பிறகு ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பிலேயே நானும் கதாநாயகனாக நடிப்பேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை.

ஆர்.எம்.வீ.யின் தயாரிப்பில் உருவான `பாட்ஷா’ பெரிய வெற்றி பெற்றது. அப்படத்தின் விழாவில் நான் பேசிய பேச்சினால் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீ. பதவி இழந்தார். அடுத்தநாள் பயத்துடன் அவருக்கு போன் பண்ணினேன். அவர் இதற்காகச் சிறிதும் கவலைப்படாமல் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆர்.எம்.வீரப்பன் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்பார்கள். மருத்துவமனைக்குப் போன வேதனையை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவமனைக்குப் போகாத அளவுக்கு உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

இப்போது நான் நடிக்கும் கபாலி படம் பாட்ஷாவை மிஞ்சுமா என்று கேட்கிறார்கள். சத்தியமா அதுபோல எதிர்பார்க்காதீர்கள். பாட்ஷாவை மிஞ்சும் இன்னொரு படம் வெளிவர வாய்ப்பில்லை. அது ஆர்.எம்.வி.யால்தான் முடியும். மேடைக்காக நான் சொல்லவில்லை. பாட்ஷா கதாபாத்திரத்தை முதலில் வெளிப்படுத்தவேண்டாம் என்று முடிவெடுத்தபோது இல்லை, குறிப்பிட்ட ஒரு காட்சியில் வெளிப்படுத்தவேண்டும் என்று சொன்னவர் ஆர்.எம்.வி. பாட்ஷா படம் அவ்வளவு பெரிய ஹிட் ஆகக் காரணமே ஆர்.எம்.வி. தான். எப்போதும் ஒரு பாட்ஷாதான் என்று அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.