தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

மொழிபெயர்ப்பு முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுகவிழா நடத்தப்படும்’ என்று வைரமுத்து தெரிவித்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:40 am

எழில்

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட அந்த நாவல் 2003-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இதுவரை 1லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.

லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு அந்நாள் கல்வி அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டன் மாநகர அந்நாள் மேயர் ராபின் வேல்ஸ் இருவரும் கலந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தமிழில் வெளியான இந்த நாவலை இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் கொண்டுசெல்ல சாகித்ய அகாடமி முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆங்கிலம் – அஸ்ஸாமி – வங்காளி – போடா – டோக்ரி – குஜராத்தி – இந்தி – கன்னடம் – காஷ்மீரி – கொங்கணி – மைதிலி – மலையாளம் – மணிப்புரி – மராத்தி – நேபாளி – ஒடியா – பஞ்சாபி – ராஜஸ்தானி – சமஸ்கிருதம் – சந்தாலி – சிந்தி – தெலுங்கு – உருது ஆகிய 23 மொழிகளில் மொழிபெயர்க்க சாகித்ய அகாடமி முடிவெடுத்திருக்கிறது. மொழிபெயர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ் கவிஞர் வைரமுத்துவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

‘இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாசாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுகவிழா நடத்தப்படும்’ என்று வைரமுத்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.