/

எனக்கு யாரும் பொண்ணு தர மாட்டேன் என்கிறார்கள்: பிரேம்ஜி வருத்தம்

நான் பார்ட்டிக்கு போவதைப் பற்றி பலரும் எழுதியதால் எனக்கு யாரும் பொண்ணு தர மாட்டேன் என்கிறார்கள்.

News image
Updated On :8 செப்டம்பர் 2015, 6:44 am

பிரேம்ஜி அமரன், அத்வைதா, லீலா நடிப்பில் ஆர்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'மாங்கா'. பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேம்ஜி பேசியதாவது:

'சென்னை 28' நண்பர்களில் முதலில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள் என ஒரு பந்தயம் வைத்தோம். எல்லோருமே நாயகன் ஆகிவிட்டார்கள். நான்தான் கடைசி. இதற்கு 9 வருடம் ஆகியுள்ளது.

என்னுடைய முகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள அண்ணன்தான் காரணம். அவர் இயக்கும் படங்களில் பெரிய ஹீரோக்கள் நடிக்கிறார்கள். அந்தப் படங்களில் என்னை நடிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட்டார். அண்ணன் இல்லை என்றால் நான் ஹீரோ இல்லை, ஜீரோதான்.

'மாங்கா' படத்தில் என்னுடன் நடிக்க பல ஹீரோயின்கள் தயங்கினார்கள். ஹீரோவாக நடித்து பெரியாளாக ஆனவுடன் என்னுடைய அக்கா, அம்மா வேடத்தில் அவர்களை நடிக்க வைத்து பழிவாங்குவேன்.

நான் பார்ட்டிக்கு போவதைப் பற்றி பலரும் எழுதியதால் எனக்கு யாரும் பொண்ணு தர மாட்டேன் என்கிறார்கள். அண்ணன் எனக்காக தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.