தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பேனா? நடிகை ஷாம்லி பதில்!

நான் நன்றாக தமிழ் பேசுவேன். மொழி என்கிற அடிப்படையில் எனக்குத் தமிழ்ப் படங்களில் நடிப்பதுதான்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:39 am

எழில்

ஷாம்லி இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கிறார் என்பதுதான் இப்போதைய பரபரப்பான பேச்சு. என்ன திடீரென்று நடிக்க வந்துவிட்டார், ஏன் இத்தனை நாளாக நடிக்கவில்லை என்று பல கேள்விகள். தனுஷ் மற்றும் விக்ரம் பிரபு என இரு முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார் ஷாம்லி.

மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

Story image

கல்லூரி முடித்தபிறகு 6 மாத காலம் ஓய்வு இருந்தது. அதனால் நடிக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது. ஓய் என்கிற தெலுங்குப் படத்தில் நடித்த பிறகு சிங்கப்பூருக்கு சினிமா தொடர்பாக படிக்கச் சென்றேன். 2010 முதல் அங்குதான் இருந்தேன். நடிக்கவேண்டும் என்பதைவிடவும் படிப்பதில்தான் ஆசை இருந்தது. இப்போது மீண்டும் வாய்ப்பு வந்தது. இந்தமுறை நடிக்கலாம் என்று தோன்றியது. வருங்காலத்தில் படத்தை இயக்கவேண்டும் என்கிற எண்ணமும் உண்டு.

முதலில் விக்ரம் பிரபுவுடன் வீர சிவாஜி என்கிற படத்தில் நடிக்க உள்ளேன். தனுஷுடனான படம் தொடங்க சிறிது நாளாகும். மலையாளப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளேன்.

மக்கள் இப்போதும் என்னை அஞ்சலியில் நடித்த குழந்தை என்கிற அடையாளத்துடன் தான் பார்க்கிறார்கள். ஷாலினியின் தங்கை, அஜீத்தின் மனைவியின் தங்கை என்றும் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். என் திறமை மூலமாக எனக்கென்று ஒரு அடையாளத்தைத் தேடிக்கொள்வேன்.

தமிழ் தான் எனக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும். நான் சென்னைப் பெண். இங்குதான் பிறந்து வளர்ந்தேன். நான் நன்றாக தமிழ் பேசுவேன். மொழி என்கிற அடிப்படையில் எனக்குத் தமிழ்ப் படங்களில் நடிப்பதுதான் சவுகரியமாக இருக்கும்.

அஜீத்துடன் நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பே இல்லை. அது நன்றாக இருக்காது. அவர் படங்களில் கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன். மற்றபடி அவருக்கு ஜோடியாக நடிக்கவே மாட்டேன் என்றார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.