தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியன் ஐடல்: வெற்றியைத் தவறவிட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ!

இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல வெற்றி பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Updated On :7 செப்டம்பர் 2015, 12:12 pm

சோனி டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏனெனில் முதல் இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியை வென்றவர் தமிழ்ப் பெண் அஞ்சனா. பெங்களூரில் வசிக்கும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல வெற்றி பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அனன்யா ஸ்ரீதம் நந்தா என்கிற ஒடிஷாவைச் சேர்ந்த 14 வயது பெண் முதலிடம் பெற்றார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் சோனி டிவியுடன் ஒரு ஒப்பந்தமும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தொடர்பான மற்றொரு ஒப்பந்தமும் கிடைத்தன.

13 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் அனன்யா, நித்யஸ்ரீ மற்றும் நகித் அப்ரின் (அஸ்ஸாம்) ஆகிய மூன்று பெண்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்கள்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.