என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி, ரக் ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. இங்கு கொண்டாடப்படும் பொங்கல்தான் என் பண்டிகையாக உள்ளது. தமிழ்நாடு, சென்னையை விட்டுச் செல்லமாட்டேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
'என் எடை அதிகமாகிக்கொண்டே போனது. பட வாய்ப்புகளும் குறைந்தன. நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளானேன். என் வருத்தமும் மன உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை. எடையைக் குறைக்க பல விதங்களில் முயற்சி செய்து பார்த்தேன். பல சிகிச்சை முறைகளைப் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை.
மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். எடையை எப்படியாவது குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டம் தான் இது. அப்படிப்பட்ட சூழலில்தான் சாக் ஷி வெல்னஸ் பற்றி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன்.
எனக்கு முதலில் நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எடைமட்டும் குறையாததால் இந்த புது முயற்சி மீது நம்பிக்கை வரவில்லை. அல்ட்ரா சவுண்ட் ரேடியோ பிரிக்குவன்ஸி முறையில் முதலில் ஒன்றரை கிலோ எடை குறைந்தபோது எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. பிறகுதான் நம்பிக்கை வந்தது. இம்முறையில் கொழுப்பு செல்களை அழித்து வியர்வையாக வெளியேற்றப்படுகிறது. இதன்படி மூன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைத்தேன் (18 கிலோ). இப்போது இந்த சிகிச்சையை மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன்.
என்னை இப்போது பார்ப்பவர்கள் என் உணவுமுறை பற்றிக் கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்ஸாப் பிரியை. பீட்ஸா டோமினோவில் பிளாட்டினம் மெம்பர் நான், அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிடுவேன். ஆனால் இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்.
இனி நல்ல பட வாய்ப்புகள் வரும் என்கிற நம்பிக்கை உண்டு. ஆக் ஷன் நாயகியாக நடிக்க விரும்புகிறேன்.
எனக்கு அரசியலில் ஆர்வம், ஈடுபாடு உண்டு. நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன். பல கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எப்போது அரசியலில் இறங்குவேன் என்று இப்போது சொல்ல முடியாது.
என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி, ரக் ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. இங்கு கொண்டாடப்படும் பொங்கல்தான் என் பண்டிகையாக நினைவுக்கு வருகிறது. தமிழ்நாடு, சென்னையை விட்டுச் செல்லமாட்டேன்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம், கேரளம், தமிழகத்தில் இவர்கள் வெற்றி பெறுவர்: பரூக் அப்துல்லா

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


