‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்கியுள்ள 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து உள்ளார்.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘இது நம்ம ஆளு.’ இந்தப் படத்தின் 2 பாடல் காட்சிகளில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி. ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார்.
அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவிகிதத் தொகையைக் கொடுத்து விட்டேன். மீதி 25 சதவிகிதச் சம்பளம் மட்டுமே பாக்கி உள்ளது. படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இந்த மாதம் ஐந்து நாள்களும், அடுத்த மாதம் ஐந்து நாள்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் இதற்கு நயன்தாரா மறுத்துவிட்டார்.
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்தவுடன், அவருக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியைக் கொடுத்து விடுகிறோம். எனவே மீதமுள்ள பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்.’ என்று புகாரில் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம், கேரளம், தமிழகத்தில் இவர்கள் வெற்றி பெறுவர்: பரூக் அப்துல்லா

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


