துல்லியமான வியூகங்களால் சரத் குமார் - ராதாரவி அணியை வீழ்த்திய விஷால்! வெளிவரும் ரகசியங்கள்!
நாடக நடிகர்களின் ஆதரவு சரத் குமார் அணிக்கு உள்ளதால் அந்த அணியே ஜெயிக்கும் என பலரும் எதிர்பார்த்தார்கள். மேலும் பல ஆண்டுகளாக பதவியில் உள்ளதால் சரத் குமார் - ராதாரவி என்கிற பெரிய ஆலரமத்தைச் சாய்ப்பது எளிதல்ல. நாடக நடிகர்கள், நண்பர்கள் என பலருடைய ஆதரவுடன் சரத் குமார் அணியே ஜெயிக்கும் என்று திரையுலகினரால் கருதப்பட்டது.









