தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காமெடியில் அசத்தல்: ரோபோ சங்கருக்கு தாஜ் ஹோட்டலில் விருந்து அளித்த தனுஷ்!

இனி தொடர்ந்து படங்கள் பண்ணுவோம் என்று ரோபோ சங்கரை உற்சாகப்படுத்தியுள்ளார். 

News image
Updated On :22 ஜூலை 2015, 8:39 am

இதுவரை டிவி நிகழ்ச்சிகளிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த ரோபோ சங்கருக்கு மாரி படம் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

படம் முழுக்க வரும் ரோபோ சங்கர், காமெடியில் அதகளம் செய்துள்ளதால் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதல் நாளன்று படம் ரிலீஸான திரையரங்குகளுக்குச் சென்று பார்த்தபோதுதான் தன்னுடைய காமெடியை ரசிகர்கள் எந்தளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டார். அன்று மதியமே ரோபோ சங்கரின் காமெடி குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இதனால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் ரோபோ.

இதற்கு முன்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, வாயை மூடிப் பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். மாரி படத்தில்தான் அவருக்கு முக்கிய வேடம் அளிக்கப்பட்டுள்ளது.

படம், முதல் நாளன்று ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாலும் படத்தைப் பார்த்த குடும்பத்தினர் ரோபோ சங்கரின் காமெடி பற்றி குறிப்பிட்டுச் சொன்னதாலும், ரோபோ சங்கரை மகிழ்விக்கும் விதமாக சென்னையிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்துள்ளார் தனுஷ். இனி தொடர்ந்து படங்கள் பண்ணுவோம் என்று ரோபோ சங்கரை உற்சாகப்படுத்தியுள்ளார். 

ரோபோ சங்கர், அடுத்ததாக விஜய்யின் புலி படத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.