இன்று, பாகுபலி படம், உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆரவாரம் எல்லாம் கேரளாவில் இல்லை. அங்கு மலையாளத்தில் டப் செய்யப்பட்டு 200 திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த பாகுபலி, 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. காரணம், கேரளத் திரையுலகில் இப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புதான். மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தால் நேரடி மலையாளப் படத்துக்கு வருங்காலத்தில் பாதிப்பு வரும் என்பதால் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
கேரளாவில் பாகுபலி படத்தை குளோபல் யுனைடெட் மீடியா வெளியிடுகிறது. பெரிய அளவில் படம் வெளியிடப்படுவதால், இதற்கு கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கெனவே தமிழ்ப் படமான ஷங்கரின் ஐ, கேரளாவில் 200 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இதை கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விரும்பவில்லை எனத் தெரிகிறது. அப்போது எதிர்க்காமல் விட்டதால் இப்போது பாகுபலிக்கு செக் வைக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. நேரடியாக காரணத்தைச் சொல்லாமல் பிரமேம் பட திருட்டு டிவிடி விஷயத்தை முன்வைத்து ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள். இதனால் பாகுபலி 50 மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ளது.
ஆனால், ரசிகர்களிடையே படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் இந்தத் தடையை விரைவில் விலக்கிக்கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. மேலும் 100 திரையரங்குகளில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


