ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தொடரும் சிக்கல்: வாலு படத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் வாலு படம் குறித்த தேதிக்குள் வெளியாகுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2015, 6:59 am

சிம்பு நடித்து விரைவில் வெளியாக உள்ள வாலு படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் ஜூலை 17-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட உள்ளது.

'வாலு' படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. 'தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக 2013-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது வேறு நபர் மூலமாக படத்தை வெளியிட உள்ளார்கள். எனவே வாலு படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'வாலு' தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனால் 13-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை 'வாலு' திரைப்படம் வெளியிட தடை விதித்தது.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் வாலு படம் குறித்த தேதிக்குள் வெளியாகுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.