ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனுக்கு பாலசந்தர் விருது!

கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9-ம் தேதி ஒரு அறக்கட்டளையை கமல்ஹாசன் துவக்க இருக்கிறார்.

Updated On :7 ஜூலை 2015, 12:28 pm

காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனுக்கு கே. பாலசந்தர் விருது கிடைத்துள்ளது.

இயக்குநர் கே.பாலசந்தர் அறக்கட்டளை தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

திரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர். கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9-ம் தேதி ஒரு அறக்கட்டளையை அவருடைய சீடரூம், உலக நாயகனுமான பத்ம பூஷன் திரு. கமல்ஹாசன் அவர்கள் துவக்க இருக்கிறார்.

இயக்குநர் சிகரம் நடித்த ‘உத்தம வில்லன்’ திரைப்படம் அன்றைய தினம் காலையில் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள், வெள்ளித்திரை, சின்னத்திரை, நாடகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

மாலை 6 மணி அளவில் திரு. கே.பியைப் பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதி, திரு.ரமேஷ் விநாயகம் அவர்கள் இசையமைத்த பிரத்யேகப் பாடல் ஒன்று வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கே.பாலசந்தர் அறக்கட்டளையினை திரு. கமல்ஹாசன் அவர்கள் துவக்கவிருக்கிறார்.

அறக்கட்டளையின் சார்பாக, திரு. கே. பாலசந்தர் அவர்கள் சாதனைகள் புரிந்த நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு நடிகர், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள் தலைமையிலான நடுவர் குழு கீழ்க்கண்ட கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.

கே. பாலசந்தர் நாடக விருது – மூத்த கலைஞர் திரு.காத்தாடி ராமமூர்த்தி

கே. பாலசந்தர் திரை விருது - இயக்குநர் திரு.மணிகண்டன்  - காக்கா முட்டை

கே. பாலசந்தர் சின்னத்திரை விருது –  திரு. திருமுருகன்- இயக்குநர் & தயாரிப்பாளர்

பாலகைலாசம் சின்னத்திரை விருது –  திரு. எஸ். ராமகிருஷ்ணன் - எழுத்தாளர்

இவ்விழாவில் நடிக நடிகையர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இவ்விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை – திருவாவடுதுறை T.N.ராஜரத்தினம் கலையரங்கில் நடக்கவிருக்கிறது.

இப்படிக்கு

நிர்வாக அறங்காவலர்

புஷ்பா கந்தசுவாமி

மற்றும்

இயக்குநர் வசந்த் சாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.