தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

எனது தேவதை சினேகா, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்று அவர் ட்வீட் செய்தார்...

News image
Updated On :11 ஆகஸ்ட் 2015, 5:26 am

சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசன்னா – சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டார்கள். சினேகா கர்ப்பமாக இருப்பதை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பிரசன்னா அறிவித்தார். ஜூன் மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது.

இந்நிலையில், இன்று காலை பிரசன்னா -சினேகா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ட்விட்டர் வழியாக பிரசன்னா அறிவித்தார். ‘நேற்றைய தினம் மிகவும் நீண்ட நாளாக அமைந்தது. நேற்றைய இரவு ஒரு பிரகாசமான இரவு. அந்த நீண்ட இரவு மகிழ்ச்சியுடன் விடிந்தது. ஆம், எனது தேவதை சினேகா, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்’ என்று அவர் ட்வீட் செய்தார்.

Story image

இதைத் தொடர்ந்து சினேகா, பிரசன்னா ஆகிய இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.