பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

இந்த வாரம் வெற்றியடையும் ராசிகள் எவை? வார ராசி பலன்கள் (அக். 23 - 29)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

 zodiac signs

வார ராசி பலன்கள்

Updated On :

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (அக். 23 - 29) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கடன் வாங்கும் நேரத்தில் பத்திரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். எவரிடமும் அநாவசியப் பேச்சு பேச வேண்டாம். தொழிலை சீராக நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சாதகமான நிலையைக் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு பாசன வசதிகள் பெருகும். அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினரின் தனித்திறமைகள் வெளிப்படும்.

பெண்கள் முக்கிய முடிவுகளை கவனமாகச் சிந்தித்து எடுப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களின் கெüரவம் அலுவலகத்தில் கூடும்.

வியாபாரிகள் விற்பனையில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் சக விவசாயிகள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளுக்காக அரும்பாடுபட்டு உழைப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பெண்கள் கணவரிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குழந்தைகள் புதிய பாதையில் பயணிப்பார்கள். வண்டி வாகன யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகளின் உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் இருந்த சங்கடங்கள் குறையும்.

கலைத்துறையினர் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் கல்வியில் புதிய துறைகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கடினமான வேலைகளை சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாக நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகளின் பழைய குத்தகைப் பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு மாற்றுக்கட்சியினரும் ஆதரவு தருவார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

பெண்களின் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 23.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சிக்கனமாகச் செலவு செய்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் தனித்து எடுக்கும் முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகள் சரியான நேரத்தில் களை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பயனற்ற வாதங்களைக் குறைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு திருப்தியளிக்கும். பெண்கள் கணவரிடம் சிறப்பான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

மாணவர்கள் சக மாணவர்களுடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 24, 25.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வரவேண்டிய பணம் கை வந்து சேரும். அரசு விஷயங்களில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள்.

விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும்.

பெண்கள் கணவர் குடும்பத்தினரின் நன் மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 26, 27.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

நிதானமான பேச்சுகள் உங்கள் நன்மதிப்பைக் கூட்டும். நிர்வாகப் பணியினர் விவேகத்துடன் நடந்துகொள்வீர்கள். தொழிலில் திறமைகள் வெளிப்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் லாபம் பெருகும். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை உறுதியான மனத்துடன் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும்.

பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 28, 29.

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பூர்விக சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளியிடம் முக்கிய விஷயங்களில் கலந்தாலோசிப்பீர்கள்.

விவசாயிகள் பொருளாதார முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினரின் செயல்பாடுகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

பெண்கள் உற்றார் உறவினர்களிடம் அன்புடன் பழகுவீர்கள். மாணவர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பழைய வருத்தங்களை மறக்க முயல்வீர்கள். ஆதாயம் தரும் பயணங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் தேவைக்கேற்ப உதவுவார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் முயற்சிகளில் சிறிய தடைகளைக் காண்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். நண்பர்களின் ஆலோசனை மேன்மையை ஏற்படுத்தும். உங்கள் கெளரவம், அந்தஸ்து உயரும்.

உத்தியோகஸ்தர்களின் வேலைகளை சக ஊழியர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சியில் மதிப்பு, மரியாதைகூடப்பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் இருந்த போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் இணக்கமாகப் பழகுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தில் அதிருப்தியில் இருந்து விலகிவிடுவீர்கள். கலைத்துறையினருக்கு போட்டிகளை சமாளிக்கும் தைரியம் கூடும்.

பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வீர்கள். மாணவர்கள் தேவையான பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் = இல்லை.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் சுப காரியங்களைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் படையெடுப்பார்கள். விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் உட்கட்சி விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகத் தொடரும்.

பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (October 16 - 22). Read and benefit.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.