ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

புரட்டாசி மாதப் பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

News image

மாதப் பலன்கள்

Updated On :18 செப்டம்பர் 2025, 11:15 am

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

29.09.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

08.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் காரியங்களில் தடை தாமதம் உண்டாகாமல் இருக்க எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் இருந்த மந்தமாக நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பல முன்னனி நிறுவனங்கள் வாய்ப்பு கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும்.

மகம்:

இந்த மாதம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.  கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்.

பூரம்:

இந்த மாதம் முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின்  சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக  ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: பிரத்தியாங்கிரா தேவியை வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 06, 07

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 17, 18, 19, அக் 15, 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.