திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பிப்ரவரி மாதப் பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்தந மாதம்..

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 6:47 am

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.02.2026 அன்று சூரியன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21.02.2026 அன்று செவ்வாய் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடை கள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். பெண்கள் தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

திருவோணம்:

இந்த மாதம் எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:     பிப்ர 03, 04

அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 10, 11 ,12

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.