தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.02.2026 அன்று சூரியன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2026 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு உண்டாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர் கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். பெண்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
மூலம்:
இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.
பூராடம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 01, 02, 28
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 08, 09
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - ரிஷபம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - கும்பம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - மகரம்

பங்குனி மாதப் பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


