மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.02.2026 அன்று சூரியன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2026 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றை யும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பெண்கள் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
திருவாதிரை:
இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும்.
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 22, 23
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - விருச்சிகம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - சிம்மம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - மிதுனம்

பங்குனி மாதப் பலன்கள் - கடகம்
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


