கிரகநிலை:
ராசியில் சூரியன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
08.10.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10.10.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.
17.10.2025 அன்று ராசியில் இருந்து சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27.10.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் மனதில் இருக்கும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு தைரியம் அதிகரிக்கும். சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும். வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. குடும்பாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம்.
அஸ்தம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் குழந்தைகளின் கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும். பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 08, 09
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 17, 18
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - விருச்சிகம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - கடகம்

பங்குனி மாதப் பலன்கள் - விருச்சிகம்

பங்குனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


