மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
புத்தி சாதுரியத்தால் புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் ராசி பலத்தால் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.
தொழில் ஸ்தானாதிபதி சனியின் லாப ஸ்தான சஞ்சாரத்தால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். ராசிக்கு 12ல் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
கலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
அரசியல்துறையினருக்கு மனகவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
அஸ்வினி:
இந்த மாதம் எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலமான போக்கு காணப்படும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.
பரணி:
இந்த மாதம் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக செயல் படுவது நல்லது. தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களிடமிருந்து சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் போதும் அவசரம் வேண்டாம். கவனம் தேவை.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானத்தைக் கடை பிடிப்பது நன்மை தரும். சிறு உடல்நலக் குறைபாடாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் தேவை இல்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.
சந்திராஷ்டம தினங்கள் : 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்
தினப்பலன்கள் - மேஷம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

