/

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:

02.07.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.   

03.07.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.

17.07.2025  அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.07.2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.07.2025  அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

29.07.2025  அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் அதிக நன்மைகளை அளிக்கும். மற்றவர்கள் செய்கைகளால்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். மனதிற்கு இதமான காரியங்கள் தொடங்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

 பூரட்டாதி:

இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரேவதி:

இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 04, 05, 06

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 20, 21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.