மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
01-05-2024 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
07-05-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-05-2024 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-05-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
நட்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.
பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். காரியவெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். விளையாடும் போது கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
திருவோணம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மேஷம்

ஏப்ரல் மாதப் பலன்கள் - தனுசு

ஏப்ரல் மாதப் பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

