
இன்றைய ராசி பலன்கள் (20.08.2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு எப்படி?
இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

ஜோதிடம் - file photo
12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
ஆகஸ்ட் 20, 2026 (வியாழக் கிழமை)
மேஷம்
இன்று பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
ரிஷபம்
இன்று எடுத்த காரியம் வெற்றி பெறும். அதனால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நீங்கள் சோதனையான பலன்களையே சந்திப்பீர்கள். உடல்நிலையில் தேவையற்ற பிரச்சினை களால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் எதிலும் முழுப்பலனை அடையமுடியாது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
கடகம்
இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.தொழில், வியாபார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4
சிம்மம்
இன்று வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் சரிவரச்செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் ஆதரவுகளை இழப்பார்கள்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
கன்னி
இன்று பெரியோர் பாராட்டு கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களே நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சலம் நீங்கி நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும் கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் காப்பாற்றி அனைவரின் ஆதரவுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப்பெற நிறைய போட்டிகளை சமாளிக்க நேரிடும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9
மகரம்
இன்று கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப்பெற தாமதநிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகநேரம் உழைக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கும்பம்
இன்று எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
மீனம்
மீனம்
இன்று தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சில இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
Summary
Today Rasi Palan in Tamil - 20 August 2026 | இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20 2026 | Today Horoscope in Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



