2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு! விழிப்புணர்வு அவசியம்!

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியானது விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிகளுக்கு கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது என்று மக்கள் அறிந்திருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வு பெறுவது அவசியம்.

இந்த பணி முறைப்படி தொடங்குவதற்கு முன்பே, மோசடியாளர்கள் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது என்பதால் சில விஷயங்களை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிகாரப்பூர்வமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி எப்போது தொடங்கும் என்பதை அறிந்து கொள்க.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என யார் வந்தாலும் அவர்களது அடையாள அட்டையைக் கோரி சரிபாருங்கள்.

அனுமதியின்றி யாரேனும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்று சொல்லி வீட்டுக்குள் வர முயன்றால், அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம்.உண்மையில் மக்கள் தொகைக் கணக்கெடுக்க வந்திருப்பவர்கள் என்ற அடையாள அட்டைகளைப் பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகு அவர்களுக்கு விவரங்களைச் சொல்லலாம்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் குறித்து மக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்.இதில் இடம்பெறாத, தேவையற்ற கேள்விகளை எழுப்பினால் அதற்கு பதிலளிக்காமல் தவிர்க்கலாம்.

வீட்டுக்குள் வந்துதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வீட்டை புகைப்படம், விடியோ எடுக்க அனுமதியில்லை.முதியவர்கள், குழந்தைகள் இருந்தால், வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து தகவல்களை அளிக்கலாம். தவறில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்