அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்!

அமர்நாத் யாத்திரை வெள்ளிக்கிழமை(ஜூலை 3) தொடங்கியது.

பால்டால், நுன்வான்-பஹல்காம் ஆகிய இரு வழித்தட முகாம்களிலிருந்து யாத்ரீகர்களின் முதல் குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

ஆண்கள், பெண்கள் மற்றும் சாதுக்கள் அடங்கிய குழுவினர் விடியற்காலையிலேயே புறப்பட்டனர்.

அடிப்படை முகாம்களில் அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கொடியசைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தனர்.

முன்னதாக வியாழக்கிழமை, ஜம்முவின் பகவதி நகரில் உள்ள யாத்திரை அடிப்படை முகாமிலிருந்து 4,809-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழுவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை சென்றடைந்த யாத்ரீகர்களுக்கு நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இயற்கையாக உருவான பனிலிங்கம் அமைந்துள்ள அந்தக் குகைக் கோயிலில் அவர்கள் வழிபாடு செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் ஆகஸ்ட் 28 வரை 57 நாள்களுக்கு யாத்திரை நடைபெறவுள்ளது.

யாத்திரை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, இரு வழித்தடங்களிலும் காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாத்திரையையொட்டி, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்