தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

தென்னிந்தியாவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பின்பற்றப்பட்ட முறை குறித்து உத்தரமேரூர் கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. கிராம சபை உறுப்பினர் பதவிக்குத் தகுதியான நபர்களை குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தனர். இது ஜனநாயகத் தேர்தல் முறைக்கு முன்னோடியாகும்.

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், அமெரிக்காவிலும் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டு இருந்தாலும், 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் உலக நாடுகள் பலவற்றில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் தோன்றின.

தேர்தல் கூட்டணி என்ற பெயரில் ஜனநாயக மாண்புகளைச் சிதைத்தல், சந்தைப் பொருள்களைப் போன்று வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்குதல், தேர்தல்களை எதிர்கொள்ளும் ஆளும் கட்சிகள் மாநில அரசின் நிதியில் இருந்து பெரும்தொகையை தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு வழங்குதல் போன்றவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு உடையது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்திய தேர்தல் ஆணையம் சுயாதீன அமைப்பாகச் செயல்பட்டு, இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் முன்னெடுப்புகள் குறித்து, இந்திய வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக்கட்டுரையும் படிக்க...