யோகாவை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் கடைப்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம். அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம்: பிரதமர் நரேந்திர மோடி
ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளின் கீழ், சர்வதேச யோகா தினம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரையிலும், வங்கம் முதல் குஜராத் வரையிலும் முழு நாடும், யோகாவின் ஆன்மாவில் மூழ்கியுள்ளது என பிரதமர் பேசினார்.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உயிர்சக்தி, நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது: பிரதமர் மோடி
நல்லிணக்கம், ஒழுக்கம், அமைதிக்கான ஒரு நடைமுறைப் பாதையை யோகா வழங்குகிறது. யோகா செய்வது சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது: பிரதமர் மோடி