இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.
இன்று உடல்நிலை சீராகும். சகோதரச் சண்டைகள் தீரும். அரசுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டுவர். அலுவலகப் பெண்களுக்கு அதிகாரம், பதவியில் உள்ளவர்களின் ஆரோக்யமான உதவிகள் கிடைக்கும். இதனால் பல வசதிகளை அடையலாம். எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
இன்று புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடப்பது வெற்றி பெற உதவும். அலைச்சல் ஏற்படலாம். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9
இன்று திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை மாறும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7
இன்று வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். கோர்ட் வழக்கு காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த வேலைகளை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5
இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
இன்று உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
இன்று எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். எதை பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். ஆனாலும் சந்திரனின் சஞ்சாரத்தால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9
வெப்ஸ்டோரிஸ்