தமிழ்த் தாத்தாவும் தினமணியும்...

இன்று பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவருவதற்கு வித்திட்டவர் அவரே.

"பழந்தமிழ் இலக்கியத் தொண்டிற்குப் பிள்ளையார் சுழி போட்டால், அது உ.வே. சாமிநாதையரின் "உ' என்ற எழுத்தில்தான் தொடங்கும். இன்று பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவருவதற்கு வித்திட்டவர் அவரே.

ஏட்டுச் சுவடிகளில் ஏறக்குறைய அழியும் நிலையில் இருந்த பழந்தமிழ் இலக்கியப் புதையலைத் தேடித் தேடிச் சேகரித்துப் பதிப்பித்த பெருமை அவருடையது. அவரது தளராத ஊக்கத்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, புறநானூறு, குறுந்தொகை போன்ற பற்பல நூல்கள் ஓலைச் சுவடியிலிருந்து அச்சுப் பதிப்பாக வெளிவந்தன.

1855-ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி பிறந்த உ.வே.சாமிநாதையர், 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அகவை 87-இல் முதுமை காரணமாகக் காலமானார். தமிழே வாழ்வாக வாழ்ந்த பெரிய பெருமை அவருடையது.

முழுமையான கட்டுரைக்கு...