கடன் வாங்காமல் மாநிலங்கள் மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்றால், மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் அல்லது மின்சார கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனக் கூடுதல் சுமைகளை மக்களுக்குத் தந்து அதன் மூலம்தான் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

IANS
எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் எந்த மாநிலத்திலும் கடன் வாங்காமல் மக்களுக்கான எந்த நலத் திட்டங்களையும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
ANI
மூலதனச் செலவுக்காக கடந்த நவம்பர் வரை தமிழகத்துக்கு ரூ. 2,765 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வாங்கிய கடன், உத்தர பிரதேசம் வாங்கிய கடன் இரண்டுமே பேசுபொருளாக மாறி இருக்கிறது.
ANI
இந்திய ரிசர்வ் வங்கி தரும் புள்ளிவிவரங்களின்படி 2025-26-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.9.55 லட்சம் கோடி. உத்தர பிரதேச அரசின் மொத்த கடன் ரூ.8.58 லட்சம் கோடியாக இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டித்தான் உத்தர பிரதேச அரசைக் காட்டிலும் தமிழக அரசு அதிக அளவு கடன் வாங்கி இருக்கிறது
IANS
ஒரு மாநிலத்தின் கடன் சுமையை தொகை அடிப்படையில் அளவிடுவது சரியல்ல என்பது அவர்கள் கருத்து. பொதுவாக, ஒரு மாநிலத்தின் கடனை தொடர்புடைய மாநிலத்தின் ஜிடிபி (ஒட்டு மொத்த மாநில உற்பத்தி) என்ற அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும்.
உத்தரபிரதேசத்தை பொருத்தவரை இந்தக் கடன் அளவு அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 29.4 சதவீதமாக இருக்கும். இந்த விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டின் கடன் விகிதத்தைவிட உத்தர பிரதேசத்தின் கடன் விகிதம் அதிகம்.
முழுமையான கட்டுரைக்கு...