புதினாவின் நன்மைகள் பற்றி..
அசைவ உணவு சாப்பிடுபவர்கள், கொழுப்புப் பொருள்களைச் சாப்பிடுபவர்கள் எளிதில் ஜீரணம் ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள், புதினாவை சமையலில் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
புதினாவை நீர் விடாமல் அரைத்துப் பற்று போட்டால் தசை வலி, நரம்பு வலி, கீல் வாத வலிகளின் வேதனை குறையும்.
முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் புதினா இலைச் சாறை முகத்தில் தடவி வர, நல்ல பலன் கிடைக்கும்.
புதினா இலையை நீரில் ஊறவைத்து, அந்த நீரை அஜீரணம் உள்ளவர்கள் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
புதினாவோடு இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்துக் காய்ச்சி சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் நின்றுவிடும்.
புதினாவைத் தொக்குச் செய்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடானது தணிந்து விடும்.
எலுமிச்சைச் சாறு, புதினா இலைச்சாறு இவற்றோடு பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால், வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
முகப்பு பக்கத்துக்கு...