மன அழுத்தத்திற்கு இதுவும் முக்கிய காரணம்!

மன அழுத்தம் பற்றி...

பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் மக்கள் மன நலனில் கவனம் செலுத்துவதில்லை. மன அழுத்தத்தினாலும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

முன்னொரு காலத்தில் மன அழுத்தம் என்பது இருந்தாலும் அது பெரிதாக பேசப்படவில்லை, அதனால் பெரிய பாதிப்புகளும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நகரமயமாக்கல், வெளிநாட்டுப் பயணம், தனிக் குடும்பம், தனிப்பட்ட காரணங்களால் இன்று பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

கல்வி அழுத்தம், வேலை அழுத்தம், அதிக நிதி இழப்பு, உறவில் கருத்து வேறுபாடுகள், வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு, ஆதரவு இல்லாதது, விபத்து, ஏமாற்றம், துரோகம், திடீர் நோய் என இது மட்டுமின்றி மரபணு ரீதியாகவும் மன அழுத்தம் ஏற்படலாம் என்று தெரிவிக்கின்றன ஆய்வுகள்.

மன அழுத்தம், பதற்றம் பற்றி பலரும் தங்களுக்கு நெருங்கியவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது ஆறுதல்தான் என்றாலும் அதனைச் சரிசெய்ய சிகிச்சை எடுத்துக்கொள்ள பெரும்பாலானோர் முற்படுவதில்லை.

மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் உடல் பாதிப்புகளைப்போல அதற்கு தொடர்ச்சியான சிகிச்சைகள் யாரும் எடுப்பதில்லை என்று மன நல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீட்டில் பிரச்னை, பணியிடத்தில் பிரச்னை, உறவுகளில் சண்டை என பலரும் அந்த பிரச்னைகள் முற்றி அதனால் பாதிப்பு ஏற்படும்வரை கவனம் செலுத்துவதில்லை.

மன அழுத்தம் முற்றும்வரை காத்திருக்காமல் ஆரம்ப நிலையிலேயே அதனைக் கண்டறிந்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும், மன நலத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது பல்வேறு உடல்பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்க உதவும் என்றும் என மனநல நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மன நலன் என்பது மோசமான சூழ்நிலைகளைச் சமாளிப்பது மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணங்களையும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

முழு செய்தியைப் படிக்க...