குளிர்கால சரும பராமரிப்பு பற்றி...
வெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவருக்குமே தெரியும்.
சருமம் உணர்திறன் மிக்கதாக இருக்கும் பலருக்கும் குளிர்காலத்தில் சருமம் வறண்டுபோவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
எனவே, குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். தோலில் எண்ணெய்த் தன்மை குறைந்து போய் விடுவதால், சோப்பை பயன்படுத்தினால் மேலும் வறட்சி ஏற்படும்.
இதற்குப் பதிலாக குளிக்கும்போது கடலை மாவு அல்லது சிறுபயிறு தூளைப் பயன்படுத்தலாம்.
skinகுளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். எனவே, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசாகச் சூடாக்கி, உடலில் தேய்த்து, சிறிது நேரத்துக்குப் பின்னர் இளம்சூடான நீரில் குளிக்கலாம். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
வெயில் காலத்தில் சன் ஸ்கின் லோஷன் பயன்படுத்துவதைப் போல், குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசிங் கிரீம் பயன்படுத்தினால் தோலின் பராமரிப்புக்கு உதவும்.
முகப்பு பக்கத்துக்கு...