வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதை அறிந்துகொள்ள...

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு 97,37,831 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

எஸ்ஐஆருக்கு முன்னதாக 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5,43,76,756 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளா்களும், அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளா்களும் நீக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலரிடமும் அந்தந்த தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் இருக்கும்.அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

எனினும் ஆன்லைன் மூலமாக https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு அறியலாம்.

https://elections.tn.gov.in/index.aspx என்ற தமிழக தேர்தல் ஆணைய பக்கத்தில் 'சிறப்பு தீவிர திருத்தம் 2026' (Special Intensive Revision 2026) என்ற இணைப்பை அழுத்தினால் அதன்பின் வரும் திரையில் உங்களுடைய மாவட்டம், தொகுதியைத் தேர்வு செய்தால் நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலாக கிடைக்கிறது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலமாகமோ உங்களுடைய வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவத்தைப் பெற்றும் நிரப்பிக் கொடுக்கலாம்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய படிவம் 6-யை ஜனவரி 18 ஆம் தேதிக்குள் நிரப்பி கொடுக்க வேண்டும்.

இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும். இதன்பிறகு எந்த திருத்தமும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முகப்பு பக்கத்துக்கு...