20 Dec, 2025 Saturday, 11:03 AM
The New Indian Express Group
Webstories
Text

வரம் தரும் வாரம்!

PremiumPremium

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

Rocket

வார பலன்கள்

Published On12 Dec 2025 , 10:04 AM
Updated On12 Dec 2025 , 10:21 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Parvathi

பாராட்டுடன், பணவரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வெளியூர் சென்று அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாகப் பேசவும். கலைத்துறையினருக்கு பொன்னான வாய்ப்புகள் தேடிவரும்.

பெண்கள் கணவரின் மனமறிந்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

உயர்ந்தவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். வியாபாரிகள் தங்கள் பொருள்களை புதிய சந்தையில் விற்க முயற்சி செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் மனநிம்மதி அடைவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். மாணவர்கள் படிப்பில் முதலிடத்தில் வருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். மழலைப் பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் விலையைக் குறைத்து அதிக அளவில் விற்பனை செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளைச் சரியாக உணர்ந்து செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். மாணவர்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சமுதாயத்தில் கௌரவமும், அதனால் அந்தஸ்தான பதவிகளையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் முக்கியப் பிரச்னைகளில் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய கலைஞர்கள் நண்பர்களாவார்கள்.

பெண்கள் பொறுமையாக இருந்து குடும்பப் பொறுப்புகளைச் செயல்படுத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய துறையில் முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரிகள் பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் உங்கள் அந்தஸ்துக்குக் குறைவான விஷயங்களில் ஈடுபடமாட்டீர்கள். கலைத்துறையினர் சிறு சிறு நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

பெண்கள் தங்கள் பேச்சினால் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மனதுக்குப் பிடித்த வேலைகளில் சேர்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் அமோகமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் கற்பனையை துறையில் செயல்படுத்துவீர்கள்.

பெண்கள் குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மாணவர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீடு களைக் கட்டும்.

உத்தியோகஸ்தர்கள் உழைத்து முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு பணப்பெருக்கம் தானாகவே வரத்தொடங்கும்.

கலைத்துறையினருக்கு துறையில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியான சூழலைக் காண்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 5

பூர்விகச் சொத்துகளில் இருந்த அலைச்சல்கள் குறையும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களின் கடினமான பணிகளில் சக ஊழியர்கள் பங்கெடுத்துக் கொள்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு திடீர் பணவரவு உண்டாகும்.

பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் பெற்றோரின் சொல்லுக்குக் கட்டுப்படுவீர்கள்.

சந்திராஷ்டம் - டிசம்பர் 6, 7 .

நேர்முக, மறைமுக எதிர்ப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளியிடங்களுக்குச் சென்று விரிவுபடுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சி மேலிடத்திடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய பாராட்டுகளும் பரிசும் கிடைக்கும்.

பெண்கள் குடும்ப கெüரவத்தைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து படித்து ஞாபகச் சக்தியை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 8, 9.

நெடுநாளாக தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் பற்றிய விமர்சன பேச்சுகள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்கள் புதிய சேமிப்புகளில் நாட்டம் கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 10, 11.

பொது காரியங்களில் ஈடுபட்டு நல்ல பெயரெடுப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு உழைப்பின் பலன் தாமதமின்றிக் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.

பெண்களுக்கு விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

பொருளாதாரத்தில் சிறிது ஏற்றம், இறக்கம் இருக்கும். வாக்குறுதிகளைக் கவனமாகக் கொடுக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைச் செயல்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் உயர்ந்தவர்களுடன் சந்திப்பு நிகழும். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள்.

பெண்களுக்குப் பொருளாதார நெருக்கடிகள் குறையும். மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
மூன்வாக் - மினி கேசட் விடியோ!
வீடியோக்கள்

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
வீடியோக்கள்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
வீடியோக்கள்

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
வீடியோக்கள்

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
வீடியோக்கள்

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023