மேஷம்இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6
ரிஷபம்இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
மிதுனம்இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
கடகம்இன்று நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். ஒருசிலர் அரசுப்பணியில் சேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
சிம்மம்இன்று உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
கன்னிஇன்று வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7
துலாம்இன்று உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9
விருச்சிகம்இன்று பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9
தனுசுஇன்று ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7
மகரம்இன்று எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை வந்துசேரும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கும்பம்இன்று அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
மீனம்இன்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்னையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3
மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..