யோகம் தரும் நாள் இன்று!

மேஷம்இன்று தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் நல்லபடி முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளம் சிவப்புஅதிர்ஷ்ட எண்: 1, 9

ரிஷபம்இன்று எதிர்பார்த்தபடி சரக்குகள் விற்பனையாகும். போட்டி விற்பனையாளர்கள் விலகிச்செல்வார்கள். குழந்தைகளின் உயர்கல்விக்கான கடன் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படவேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 6

மிதுனம்இன்று நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் நன்மை ஏற்படாது. எதிர்பார்த்த முடியுமென்று நினைத்த ஒரு காரியம் திடீரென நல்ல முடிவுக்கு வரும். அந்த முக்கியமான காரியம் சாதகமாகவே இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 3, 5

கடகம்இன்று தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நினைத்தபடி மாற்றங்களைச் செய்யலாம். வியாபாரிகள் போட்டி விற்பனையாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 2, 3

சிம்மம்இன்று கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

கன்னிஇன்று சொத்து சார்ந்த வழக்குகள் வெற்றி தரும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களால் போற்றப்படுவார்கள். கடனும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 5

துலாம்இன்று வரவேண்டிய பழைய பாக்கிகள் நீங்கள் கேட்காமலேயே வந்துசேரும். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். இதுவரை சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 6, 9

விருச்சிகம்இன்று மனைவி வழியில் அனுகூலங்கள் வந்துசேரும். சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி புதிய பதவிகளைப் பெறுவார்கள். நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். பெற்றோர்கள் வழியில் இருந்த பகை நீங்கும். வழக்குகள் சாதகமாகும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பழுப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட நிறம்: 3, 9

தனுசுஇன்று உங்கள் முயற்சிக்கேற்ற வரவைப் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஒருசிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகளில் வெற்றியும் கிட்டும். உங்களைப் பிரிந்துசென்ற சொந்தம் திடீரென தேடிவந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மகரம்இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மறைந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

கும்பம்இன்று வியாபாரிகள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய முயற்சிகளை தாமதித்து செய்யவேண்டும். எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் காரியத்தில் வெற்றிகாணலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்புஅதிர்ஷ்ட எண்: 1, 4, 7

மீனம்இன்று உறவினர்கள், மற்றவர்கள் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் மருத்துவச் செலவைக் குறைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..