பாகிஸ்தானை வென்ற இந்தியா!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்ற பாக். பவுலிங் எடுத்ததால், முதலில் பேட் செய்த இந்தியா 19 ஓவா்களில் 119 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார்.

பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, ஹரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், குறைந்த ரன் இலக்கை நோக்கி பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 44 பந்துகளுக்கு 31 ரன்கள் அடித்தார்.

பும்ரா 4 ஓவர்களுக்கு 14 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களுக்கு 24 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய அணி பாகிஸ்தானை 20 ஓவர்களில் 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

முதல் போட்டியில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியிடம் தோற்ற பாக். அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தோற்றுள்ளது.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...