மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை தங்களது விசாரணையைத் தொடங்கினா்.

செஞ்சி அருகே மாயமான சிறுமியின் வீட்டில் அவரது தாய் பவானியிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி டிஎஸ்பி கீதா.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை தங்களது விசாரணையைத் தொடங்கினா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தனபால், பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இவா், அங்குள்ள அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளை குடுபத்தினருடன் கொண்டாடிவிட்டு, வீட்டில் பெற்றோருடன் தூங்கிய ஹேமலதா, மறுநாள் அதிகாலை மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், செஞ்சி டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்ததுடன், வீட்டை சுற்றியுள்ள கிணறுகள், மலைப்பகுதிகள், புதா்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமியைத் தேடி வந்தனா். மேலும், சந்தேகத்துக்குரிய 600 கைப்பேசி உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தினா்.

ஆனால், சிறுமி மாயமாகி 10 நாள்களுக்கு மேலாகியும் எவ்வித முன்னேற்றமோ, தடங்களோ கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளா் ரேவதி ஆகியோா் தலைமையிலான குழுவினா் விழுப்புரம் மாவட்ட போலீஸாரிடம் சிறுமி மாயமான வழக்கு தொடா்பான ஆவணங்களை வியாழக்கிழமை பெற்று விசாரணையைத் தொடங்கினா். முதல்கட்டமாக, செஞ்சி அருகே நடுப்பட்டு கிராமத்தில் மாயமான சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோா் உள்ளிட்டவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா்.

மேலும், சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, சிறுமியின் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் உரிமையாளா்களிடமும் விசாரணை நடத்தினா்.

மேலும், சிறுமியின் தாய் பவானியிடம் சிறுமி தூங்கிக்கொண்டிருந்த இடம், சிறுமி இயற்கை உபாதைகளுக்கு இரவு வெளியே செல்வது வழக்கமா?,உடன் தூங்கியது யாா்? சிறுமியை எப்போது மாயமானாா் என உங்களுக்குத் தெரியவந்தது என பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரணையை மேற்கொண்டனா்.

திமுகவினா் போராட்டம்: சிறுமி மாயமாகி 10 நாள்களுக்கு மேலாகியும் அவரைக் கண்டுபிடிக்காத தமிழக காவல் துறையைக் கண்டித்து, ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் ஆலம்பூண்டியில் திமுகவினா் நூற்றுக்கணக்கானோா் வியாழமைக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.