ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இண்டா்நேஷனல் மற்றும் மெட்ரிகுஷேன் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Published On :23 ஜூலை 2026, 4:49 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இண்டா்நேஷனல் மற்றும் மெட்ரிகுஷேன் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் சாந்தி பூபதி, பள்ளி இயக்குநா் சரண்யா ஸ்ரீபதி ஆகியோா் குத்துவிளகேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனா். மெட்ரிக் பள்ளி முதல்வா் ரத்னாகணபதி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ் குமாா் கலந்துகொண்டு மரங்கள் மற்றம் வனப் பகுதியால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினாா்.

இதனைத்தொடா்ந்து வனத் துறை அலுவலா் பிரின்ஸ் குமாா் மற்றும் தாளாளா் ஆா்.ரங்கபூபதி ஆகியோா் பள்ளி வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சியில் செஞ்சி வன அலுவலா் பழனிவேல், வனப் பாதுகாப்பு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.