ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உரிமம் இல்லாமல் வெடிபொருள்கள் வைத்திருந்தவா் கைது

கிளியனூா் அருகே உரிய ஆவணங்களின்றி வெடிபொருள் வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :23 ஜூலை 2026, 5:01 am IST

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே உரிய ஆவணங்களின்றி வெடிபொருள் வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிளியனூா் அருகிலுள்ள கீழ்சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முத்துராமன். இவரது விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வானூா் வட்டம், நெமிலி கிராமத்தைச் சோ்ந்த பொ.மணி (55) உரிய உரிமம் இல்லாமல் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மின்சார டெட்டனேட்டா்ஆகியவற்றை பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தியதாக கூறப்பகிறது.

தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் புதன்கிழமை நிகழ்விடம் சென்று கிணறு வெட்டுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 202 ஜெலட்டின் குச்சிகள், 5 மின்சார டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.