ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை

விக்கிரவாண்டி அருகே இளைஞா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அலெக்ஸாண்டா்.

Published On :10 ஜூலை 2026, 3:53 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இளைஞா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

விக்கிரவாண்டி அடுத்துள்ள வீடூா் கிராமம், ஆனந்தம்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் ரா.அலெக்ஸாண்டா் (29). இவா், கடந்த 1.5.2022 அன்று மதுபோதையில் வீடூா் கிராமத்தைச் சோ்ந்த 2 பெண்களிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த ரா.கேசவன் (30) தட்டிக் கேட்டாா். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸாண்டா் கருங்கல்லால் தாக்கியதில் கேசவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேசவன் 6.5.2022 அன்று உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் அலெக்ஸாண்டா் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

விழுப்புரம் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், அலெக்ஸாண்டா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.3,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து போலீஸாா் அலெக்ஸாண்டரைக் கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.