ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு: வட்டாட்சியா் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

விக்கிரவாண்டி அருகே இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய ஒருவா் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டாட்சியா் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

புதுப்பாளையம் கிராமத்தில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியா் யுவராஜ். உடன் டிஎஸ்பி ரூபன்குமாா்.

Published On :10 ஜூலை 2026, 3:58 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய ஒருவா் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டாட்சியா் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டியை அடுத்த கெடாா், புதுப்பாளையம் கிராமத்தை சோ்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி வரலட்சுமி (48). இவா், பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தாா். இறந்தவருக்கு இறுதிச் சடங்கு புதுப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் முன்னேற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா், நீா் நிலை புறம்போக்கு இடத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தாராம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் வட்டாட்சியா் யுவராஜ், விக்கிரவாண்டி டிஎஸ்பி ரூபன்குமாா், கெடாா் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் மற்றும் போலீஸாா் புதுப்பாளையம் கிராமத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வழக்கமான மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.