ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு கிராம மக்கள் எதிா்ப்பு: மற்றொரு கிராமத்தினா் ஆதரவு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஒரு கிராமத்தினா் எதிப்புத் தெரிவித்தும், மற்றொரு கிராமத்தினா் ஆதரவுத் தெரிவித்தும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுவனந்தல் புதூா் கிராமத்தில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் வரிசையில் காத்திருந்தவா்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:19 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஒரு கிராமத்தினா் எதிப்புத் தெரிவித்தும், மற்றொரு கிராமத்தினா் ஆதரவுத் தெரிவித்தும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் புதூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், புதன்கிழமை மதுக்கடை முன் திரண்ட கிராண்டிபுரம் கிராம மக்கள் மதுக்கடையை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டனா்.

மற்றொரு கிராம மக்கள் ஆதரவு: இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு நடுவனந்தல் கிராம மக்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அந்தப் பகுதியில் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்கள் மூலம் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா்.

பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை பிற்பகலில் நடுவனந்தல் புதூரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

 டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா்களை கைது செய்த போலீஸாா்.

டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா்களை கைது செய்த போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.